ஜனநாயகன் படக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விஜயின் 69 ஆவது படமாக ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஹெச். வினோத் இந்த படத்தை இயக்குகிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்து போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தன. அதே சமயம் ஆரம்பத்தில் 2025 அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ஜனநாயகன் திரைப்படம் 2026 பொங்கலுக்கு வெளியாகும் என சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் 2026 ஜனவரி 8 அல்லது 9 அல்லது 12 ஆகிய மூன்று தேதிகளில் ஏதேனும் ஒன்றுதான் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி என சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (மார்ச் 24) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
Indha …… namakku super collection ma 🔥
Stay Tuned, 3 hours to go!#JanaNayagan #ஜனநாயகன் pic.twitter.com/ZPr2MIHaRM
— KVN Productions (@KvnProductions) March 24, 2025
அதன்படி இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இன்று மாலை 6 மணி அளவில் ஜனநாயகன் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளது.
மேலும் ஜனநாயகன் படமானது தற்போது அரசியல்வாதியாக மாறி உள்ள விஜயின் கடைசி படம் என்பதாலும், இந்த படமும் அரசியல் கதைகளத்தில் உருவாகிறது என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. எனவே இப்படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.