Homeசெய்திகள்சினிமாமிஸ்டர் அன்ட் மிஸஸ் மாஹி திரைப்படம்... சென்னையில் புரமோசனை தீவிரப்படுத்தும் ஜான்வி...

மிஸ்டர் அன்ட் மிஸஸ் மாஹி திரைப்படம்… சென்னையில் புரமோசனை தீவிரப்படுத்தும் ஜான்வி…

-

மிஸ்டர் அன்ட் மிஸஸ் மாஹி திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் படத்தின் புரமோசன் பணிகள் சென்னையிலும் சூடு பிடித்துள்ளன.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர். இவர், மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஆவார். இவர் பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தார். அதேபோல, மலையாள படத்தின் இந்தி ரீமேக்கிலும் அவர் நடித்து புகழ் பெற்றார்.

இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், கடந்த ஆண்டு தெலுங்கிலும் தடம் பதித்தார். ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் தேவரா திரைப்படத்தில் அவர் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம், அவர்  புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ராம்சரண் நடிக்கும் 16-வது திரைப்படத்தில் அவர் நாயகியாக நடிக்கிறார்.

தற்போது, இந்தியில் மிஸ்டர் அன்ட் மிசஸ் மாஹி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் ராஜ்குமார் ராவ் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தை ஷரன் ஷர்மா இயக்குகிறார். இத்திரைப்படத்தில் இருவருமே கிரிக்கெட் வீரர் மற்றும் வீரங்கனையாக நடித்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னையிலும் படத்தின் புரமோசன் பணிகள் சூடு பிடித்துள்ளன. இத்திரைப்படத்தின் புரமோசனுக்காக சென்னை வந்த நடிகை ஜான்வி கபூர், பிரபல உணவகத்தில் உணவருந்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ