தோனிக்கு மட்டுமே எண் 7 சொந்தம்… நடிகை ஜான்வி கபூர் நெகிழ்ச்சி…
தோனிக்கு மட்டுமே எண் 7 சொந்தம் என்றும், அதை யாராலும் அவரிடம் இருந்து பிரிக்க முடியாது என்றும் பிரபல பாலிவுட் நடிகை ஜான்விகபூர் தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீ தேவி மற்றும் தயாரிப்பாளரும் நடிகருமான போன கபூருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி கபூர், இளைய மகள் குஷி கபூர். ஜான்வி கபூர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தி திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் நயன்தாரா நடித்த கோலாமவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தார். அதேபோல, மலையாள படத்தின் இந்தி ரீமேக்கிலும் அவர் நடித்து புகழ் பெற்றார்.
இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், கடந்த ஆண்டு தெலுங்கிலும் தடம் பதித்தார். ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் தேவரா திரைப்படத்தில் அவர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதே சமயம், ராம்சரண் நடிக்கும் 16-வது திரைப்படத்தில் அவர் நாயகியாக நடிக்கிறார். இந்தியில் ஜான்வி கபூர் புதிய படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு மிஸ்டர் அன்ட் மிசஸ் மாஹி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்படத்தை ஷரன் ஷர்மா இயக்க, ராஜ்குமார் ராவ் நாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் முதல் தோற்றத்தில் ஜான்வி அணிந்திருந்த ஆடையில் 6 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் காரணம் தெரிவித்துள்ளார். அதன்படி 7 என்ற எண் தோனிக்கு சொந்தமானது. அதை யாராலும் அவரிடமிருந்து பிரிக்க முடியாது. அது வேறு யாருக்கும் சொந்தம் கிடையாது என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். இத்திரைப்படம் மே மாத இறுதியில் வெளியாகிறது