Homeசெய்திகள்சினிமாவிரைவில் திருமணம் என வதந்தி... விளாசிய நடிகை ஜான்வி கபூர்...

விரைவில் திருமணம் என வதந்தி… விளாசிய நடிகை ஜான்வி கபூர்…

-

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகம் மட்டுமன்றி இந்தி மொழியிலும் பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் இந்தி பட நடிகரும், தயாரிப்பாளருமான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கும் பிறகும் அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், துபாய் சென்ற அவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி கபூர், இரண்டாவது மகள் குஷி கபூர்.

தற்போது ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் தடம் பதிக்க உள்ளார். அடுத்து ராம்சரண் நடிக்கும் 16-வது திரைப்படத்திலும் ஜான்வி கபூர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். புச்சிபாபு இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர், முன்னாள் மராட்டிய முதலமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவை காதலிக்கிறார்.

இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திருப்பதியில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இதைப் பார்த்து கோபம் அடைந்த நடிகை ஜான்வி கபூர், ரசிகர்களிடம் இதற்கு பதில் எளித்து எதாவது எழுதுகீறீர்களா என்று கேட்டு பதிவிட்டுள்ளார். இதற்கு நீங்கள் திருமணம் செய்துகொள்ளும் வரை உங்களை அமைதியாக இருக்க விட மாட்டார்கள் என்று ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர்

MUST READ