Homeசெய்திகள்சினிமாராஜு முருகன்- கார்த்தி கூட்டணியின் ‘ஜப்பான்’… சுவாரசியமான லேட்டஸ்ட் அப்டேட்!

ராஜு முருகன்- கார்த்தி கூட்டணியின் ‘ஜப்பான்’… சுவாரசியமான லேட்டஸ்ட் அப்டேட்!

-

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தி தனது 25வது படமான ‘ஜப்பான்‘ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை குக்கூ, ஜிப்ஸி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்குகிறார்.
ஒரு திருட்டு திரில்லர் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.

இப்படத்தில் கார்த்தியுடன் அனு இமானுவேல், சுனில், விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும் இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்தப் படம் வருகின்ற தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது. அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படம் இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் என்றும் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ