இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் செப்டம்பர் 7 அன்று வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இப்படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் வசூலை வாரி குவித்து வருகிறது. ரிலீசான வெறும் 5 நாட்களில் இப்படம் 520 கோடியை தாண்டி அபார வசூலை பெற்றுள்ளது. சமீப காலமாக வெளியாகிய பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் திரைப்படங்கள் பெரியளவு வசூலை எட்டாத நிலையில் ஷாருக்கானின் பதான், ஜவான் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
பதான் திரைப்படம் ஆயிரம் கோடியை தாண்டி வசூல் செய்த நிலையில், தற்போது ஜவான் திரைப்படமும் மிக குறுகிய நாட்களில் 1000 கோடியை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.