ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.
திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லீ இயக்கி வரும் திரைப்படம் ஜவான். இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வருவதற்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதாவது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் ஷாருக்கான்,விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஜவான் திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த விழாவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் மற்ற இரண்டு பாடல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஜவான் படத்தின் மிரட்டலான கிளிம்ஸ் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.