Homeசெய்திகள்சினிமாஷாருக்கான், விஜய் சேதுபதி கூட்டணியின் 'ஜவான்'..... ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

ஷாருக்கான், விஜய் சேதுபதி கூட்டணியின் ‘ஜவான்’….. ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

-

- Advertisement -

ஜவான் பட ஆடியோ உரிமையை மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றிய நிறுவனம்…

பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கும் இப்படத்தை தமிழ் இயக்குனர் அட்லி இயக்குகிறார். அட்லி தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் பிகில் என பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் விஜயுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில்தான் பாலிவுட் பக்கம் திரும்பி பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். அட்லியின் படங்களுக்கு தமிழில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றன. சமீப காலமாக விஜய் சேதுபதியும் பல பாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடித்து புகழ்பெற்று வருகிறார். இந்நிலையில் தான் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது தமிழ் ரசிகர்களிடமும் படத்தின் மீதான ஒரு நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் வசூல் வேட்டை நடத்துகின்றன. படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பாக கௌரி கான் படத்தை தயாரிக்கிறார். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில்தான் இந்த படத்தின் ஆடியோ உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமான T-Series ஒரு பெரிய தொகையை கொடுத்து கைப்பற்றியுள்ளது. அதன்படி படத்தின் பாடல் உரிமை 36 கோடி ரூபாய்க்கு நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது. வழக்கமாகவே அட்லி படங்களில் பாடல்கள் தாறுமாறாக ஹிட் அடிக்கும். இந்நிலையில் அனிருத் இசையில் ஜவான் படத்தின் பாடல்களும் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7 ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ