ஜவான் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். ரெட் சில்லீஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் கௌரிக்கான் தயாரித்துள்ளார். அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. மேலும் சமீபத்தில் ஷாருக்கான் ,விஜய் சேதுபதி, நயன்தாரா, உள்ளிட்டரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. அதைத்தொடர்ந்து முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதற்கிடையில் இந்த படத்தின் மிரட்டலான கிளிம்ஸ் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
Party Aarambam 🕺🏻
#NotRamaiyaVastavaiya Paadal Ipodhu Veliaagi Ulladhu!Party ஆரம்பம் 🕺🏻
#NotRamaiyaVastavaiya பாடல் இப்போது வெளியாகி உள்ளது!#Jawan releasing worldwide on 7th September 2023, in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/EiLlZG22Uy— Red Chillies Entertainment (@RedChilliesEnt) August 29, 2023
இந்நிலையில் சில நாட்களாக படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதன்படி தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது படத்தின் மூன்றாவது சிங்கிள் ‘ராமையா வஸ்தாவையா’ பாடல் வெளியாகியுள்ளது.
அந்தப் பாடலின் முடிவில் ஜவான் படத்தின் டிரைலர் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.