நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும் பிசியான நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் ஜீனி, பிரதர், காதலிக்க நேரமில்லை பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இன்னும் சில படங்களிலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் ஜெயம் ரவி. இந்நிலையில் தான் ஜெயம் ரவிக்கும் அவரது காதல் மனைவி ஆர்த்திக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் இதனால் இருவரும் விரைவில் தங்களின் விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் எனவும் சமீப காலமாக பல தகவல்கள் வலைதளங்களில் பரவி வருகின்றன. கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் விதமாகவும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, இன்ஸ்டாகிராமிலிருந்து ஜெயம் ரவியின் புகைப்படங்களை கடந்த சில தினங்களுக்கு முன்பாக நீக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சண்டைகளுக்கு ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் தான் காரணம் என்று ஒரு பக்கம் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் நடிகர் தனுஷ் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் அமலாபால் – ஏ எல் விஜய், சமந்தா- நாக சைதன்யா, ஜிவி பிரகாஷ் – சைந்தவி ஆகியோர்களின் விவாகரத்துக்கு காரணம் தனுஷ் தான் என்று ஏற்கனவே செய்திகள் பரவி வந்தன. ஆகையினால் ஜெயம் ரவியின் விவாகரத்துக்கும் தனுஷ் காரணமாக இருக்கலாம் என்று சிலர் சமூக வலைதளங்களில் நெருப்பை பற்ற வைத்துள்ளனர். இருப்பினும் ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரின் தரப்பிலிருந்தும் இந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில் இருவருக்குமான விவாகரத்து விவகாரம் எந்த அளவிற்கு செல்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேசமயம் நடிகர் தனுஷ், இதற்கு காரணமாக இருக்க மாட்டார் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -