Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவி, நித்யா மேனனின் 'காதலிக்க நேரமில்லை'..... விரைவில் வெளியாகும் புதிய அப்டேட்!

ஜெயம் ரவி, நித்யா மேனனின் ‘காதலிக்க நேரமில்லை’….. விரைவில் வெளியாகும் புதிய அப்டேட்!

-

நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் பிரதர் எனும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஜெயம் ரவி, நித்யா மேனனின் 'காதலிக்க நேரமில்லை'..... விரைவில் வெளியாகும் புதிய அப்டேட்!அதே சமயம் நடிகை நித்யா மேனன் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இட்லி கடை எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. அதன்படி இந்த படத்திற்கு காதலிக்க நேரமில்லை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தினை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். இவர் ஏற்கனவே வணக்கம் சென்னை மற்றும் காளி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் பின்னணி வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜெயம் ரவி, நித்யா மேனனின் 'காதலிக்க நேரமில்லை'..... விரைவில் வெளியாகும் புதிய அப்டேட்!அதே சமயம் இப்படமானது வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படக்குழுவினர் விரைவில் முக்கிய அப்டேட் வெளியாகும் என போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே ரசிகர்கள் பலரும் இந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

MUST READ