Homeசெய்திகள்சினிமாவிவாகரத்து தொடர்பான கதையில் நடிக்க விருப்பம் தெரிவித்த ஜெயம் ரவி!

விவாகரத்து தொடர்பான கதையில் நடிக்க விருப்பம் தெரிவித்த ஜெயம் ரவி!

-

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்.விவாகரத்து தொடர்பான கதையில் நடிக்க விருப்பம் தெரிவித்த ஜெயம் ரவி! இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ஏகப்பட்ட படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். இருப்பினும் எந்த படமும் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை தரவில்லை. அதன்படி சமீபத்தில் வெளியான ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படமும் பல சறுக்குகளை சந்தித்துள்ளது. இதற்கிடையில் காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் தான் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர் அருள் சக்தி முருகன் என்பவர் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளாராம் ஜெயம் ரவி. அதாவது கணவன்- மனைவி விவாகரத்து தொடர்பான கதையை அருள் சக்தி முருகன் ஜெயம் ரவியிடம் சொன்னதாகவும் அந்தக் கதை ஜெயம் ரவிக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.விவாகரத்து தொடர்பான கதையில் நடிக்க விருப்பம் தெரிவித்த ஜெயம் ரவி! இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் ஜெயம் ரவி தனது சொந்தக் கதையில் நடிக்கிறாரா என்று சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். ஏற்கனவே ஜெயம் ரவி – ஆர்த்தி இருவருக்கும் இடையில் விவாகரத்து தொடர்பான பிரச்சனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ