ஜெயம்ரவி நடிப்பில் உருவாகும் ஜீனி திரைப்படம், 18 மொழிகளில் வெளியாகவுள்ளது.
ஜெயம் ரவி தற்போது இயக்குனர் அகமது இயக்கத்தில் ‘இறைவன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். விஜயலட்சுமி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து சைரன் என்ற படத்தில் ஜெயம்ரவி நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜேஸ் இயக்குகிறார். படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது
இதனிடையே, மிஷ்கினின் உதவி இயக்குநர் அர்ஜூனன் இயக்கத்திலும் ஜெயம்ரவி நடித்து வருகிறார். இது அவரது 32-வது திரைப்படம் ஆகும். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவன் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜீனி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜெயம்ரவியின் திரை வாழ்வில், மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கிருத்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இதற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த படம் ஜெயம் ரவியின் கேரியரில் மிகப்பெரிய படமாக அமையும் என்று கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தை 18 மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.