ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. அதைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் சைரன் 108 எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது போலீசாக நடித்திருந்தார்.
மேலும் இவர்களுடன் இணைந்து சமுத்திரக்கனி, அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுஜாதா விஜய்குமார் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்கியராஜ் இயக்கி இருந்தார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி வெளியானது. ஜெயம் ரவியின் மனைவியான அனுபவமா பரமேஸ்வரன் ஒரு கட்டத்தில் கொலை செய்யப்பட அந்த கொலைப்பழி ஜெயம் ரவி மீது வழிகிறது.
இதனால் 14 ஆண்டுகள் ஜெயிலில் தண்டனை அனுபவிக்கிறார் ஜெயம் ரவி. அதன் பின்னர் பரோலில் வரும் இவர் தனது மனைவியை கொன்றவரை எப்படி பழி வாங்கினார் என்பதுதான் படத்தின் கதை. ஆக்சன் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்த படம் இரண்டு மாதங்களுக்கு பிறகு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -