ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் ஜன கன மன, ஜீனி, பிரதர், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.
இதற்கிடையில் ஜெயம் ரவி, அந்தோணி பாக்கியராஜ் எழுதி இயக்கியுள்ள சைரன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவி உடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் ஜெயம் ரவி இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார். ஆக்சன் திரில்லர் கதை களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த நவம்பர் மாதம் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சைரன் படத்தை பட குழுவினர் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில் 2024 பிப்ரவரி 9ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்ம தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.