Homeசெய்திகள்சினிமாஇந்த வருடம் நான் திருப்பி எந்திரிப்பேன்.... நடிகர் ஜெயம் ரவி பேச்சு!

இந்த வருடம் நான் திருப்பி எந்திரிப்பேன்…. நடிகர் ஜெயம் ரவி பேச்சு!

-

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன் என ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.இந்த வருடம் நான் திருப்பி எந்திரிப்பேன்.... நடிகர் ஜெயம் ரவி பேச்சு! ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாக இவரது நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்துடன் கிருத்திகா உதயநிதி இயக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன், லால், வினய் ராய் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகின்ற ஜனவரி 14 அன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய ஜெயம் ரவி தான் மீண்டும் எழுந்து வருவேன் என்று கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர், “வெற்றி இல்லாமல் தோல்வி இல்லை. தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை. 2014 ஆம் ஆண்டில் எனக்கு தோல்வியான நேரமாக இருந்தது.

மூன்று வருடத்திற்கு ஒரு படத்தில் தான் நடித்தேன். ஆனால் அடுத்த ஆண்டு 2015 இல் ரோமியோ ஜூலியட், பூலோகம், தனி ஒருவன் என மூன்று ஹிட் படங்களை கொடுத்தேன். ஒருவர் தோற்றுப் போய் துவண்டு கீழே விழுந்து விட்டால் அதைத் தோல்வி என்று சொல்கிறோம். அவர் திருப்பி எந்திரிக்காமல் இருந்தால் அது தான் தோல்வி. திருப்பி எந்திரிச்சா அவருக்கு தோல்வியே கிடையாது. இந்த வருஷம் நான் திருப்பி எந்திரிப்பேன். அதற்கான நல்ல லைன் அப் என்னிடம் இருக்கிறது. திறமையான இயக்குனர்கள் என்னுடன் இருக்கிறார்கள்” என்று தொடர்ந்து பேசி உள்ளார் ஜெயம் ரவி.

MUST READ