பிரபல நடிகர் ஜெயம் ரவி தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் சைரன், இறைவன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
தற்போது ஜெயம் ரவி தனது 30வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். சகோதரியாக பூமிகா சாவ்லா நடித்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் JR 30 படத்தை தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். படத்தின் ஓபனிங் சாங் தவிர படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் JR 30 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகின்ற செப்டம்பர் பத்தாம் தேதி ஜெயம் ரவியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.