Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்'.... டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’…. டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் பிரதர் படத்தின் டீசர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்'.... டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் எம் ராஜேஷ். இவர் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தினை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசை அமைத்துள்ளார். விவேகானந்த் சந்தோஷம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி தவிர சரண்யா பொன்வண்ணன், பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதை தொடர்ந்து மக்காமிஷி எனும் முதல் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே ரசிகர்கள் பலரும் வருகின்ற தீபாவளி தினத்தன்று பிரதர் திரைப்படத்தினை திரையரங்குகளில் காண மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாகும் என பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் அதை நாளில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த அறிவிப்பு ஜெயம் ரவியின் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ