Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி'.... ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’…. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

-

ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் சைரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து பிரதர், காதலிக்க நேரமில்லை போன்ற பல படங்களில் நடித்த வருகிறார் ஜெயம் ரவி. ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி'.... ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!இதற்கிடையில் மிஷ்கினின் உதவி இயக்குனர் அர்ஜுனன் இயக்கி வரும் ஜீனி படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கிரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கேபி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மிகுந்த பொருட்செலவில் ஃபேண்டஸி சம்பந்தமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி'.... ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (நாளை) மார்ச் 24ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் வெளியாகும் என்று பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தை 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ