ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக பிரதர் எனும் திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் ஜெயம் ரவி. அது மட்டும் இல்லாமல் இன்னும் பல புதிய படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார்.
அதே சமயம் சிவகார்த்திகேயனின் 25 வது படத்தில் வில்லனாக நடிப்பதற்கு கமிட்டாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ஜெயம் ரவி வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜீனி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஜெயம் ரவியின் 32வது படமான இந்த படத்தை அறிமுக இயக்குனர் அர்ஜுனன் இயக்குகிறார். இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து தேவயானி, கிரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாபிகா கேபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஃபேண்டஸி பொழுதுபோக்கு படமாக தயாராகி வரும் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படமானது ரிலீஐஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படம் 2025 மார்ச் மாதத்தில் திரைக்கு வரும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.