Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவி நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை'.... மேக்கிங் வீடியோ வெளியீடு!

ஜெயம் ரவி நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’…. மேக்கிங் வீடியோ வெளியீடு!

-

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் காதலிக்க நேரமில்லை படத்தில் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.ஜெயம் ரவி நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை'.... மேக்கிங் வீடியோ வெளியீடு!

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான சைரன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் பிரதர், ஜீனி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அதேசமயம் ஜெயம் ரவி, காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தினை நடிகரும் இயக்குனரான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். இந்த படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் யோகி பாபு, வினய் ராய், லால், ஜான் கொக்கென், வினோதினி ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்த படமானது ரொமான்டிக் காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் முன்னோட்ட வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 10) பிறந்தநாள் கொண்டாடும் ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக காதலிக்க நேரமில்லை படத்தின் மேக்கிங் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவும் போஸ்டரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ