Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவியின் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?

ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?

-

- Advertisement -

ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?அந்த வகையில் இவரது நடிப்பில் சமீபத்தில் பிரதர் எனும் திரைப்படம் வெளியானது. எம். ராஜேஷ் இயக்கியிருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம் ஜெயம் ரவி, ஜீனி, JR 34 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். இதனை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். மேலும் யோகி பாபு, வினய் ராய், லால், ஜான் கொக்கேன், வினோதினி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஜெயம் ரவியின் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?இதற்கிடையில் இந்த படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அடுத்தது இந்த படம் ரொமான்டிக் காதல் தொடர்பான கதைக்களம் என்பதால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் காதலிக்க நேரமில்லை திரைப்படமானது வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 திரைப்படமும் டிசம்பர் 20ஆம் தேதி தான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ