ஜெயம் ரவி நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பிரதர் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தினை எம். ராஜேஷ் இயக்கியிருக்கும் நிலையில் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அடுத்தது ஜெயம் ரவி, காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் கூட இவர் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று செய்திகள் வெளியானது. மேலும் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 திரைப்படமும் ஜெயம் ரவியின் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி, இன்னும் இரண்டு படங்களில் கமிட்டாகி இருக்கிறார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி டிமான்ட்டி காலனி 2 மற்றும் ரெட்ட தல ஆகிய படங்களை தயாரித்துள்ள பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறாராம் ஜெயம் ரவி.
அதில் ஒரு படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கப் போவதாகவும் மற்றொரு படத்தை அறிமுக இயக்குனர் அருள் சக்தி முருகன் இயக்கப் போவதாகவும் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. எனவே விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.