Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்'.... ஒரே நாளில் அனைத்து பாடல்களையும் வெளியிட முடிவு!

ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’…. ஒரே நாளில் அனைத்து பாடல்களையும் வெளியிட முடிவு!

-

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக சைரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் ஜெயம் ரவி ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்'.... ஒரே நாளில் அனைத்து பாடல்களையும் வெளியிட முடிவு!இதற்கிடையில் இவர், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து பூமிகா சாவ்லா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்'.... ஒரே நாளில் அனைத்து பாடல்களையும் வெளியிட முடிவு!ஏற்கனவே வெளியான தகவலின்படி இந்த படமானது விரைவில் திரையிடப்பட முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. மேலும் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் பிரதர் படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் ஒரே நாளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அடுத்ததாக படத்தின் ரிலீஸ் தேதியும் இனிவரும் நாட்களில் அறிவிக்கப்பட உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அடுத்தடுத்த நாட்களில் பிரதர் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. .

MUST READ