Homeசெய்திகள்சினிமாஇந்த மாதம் நடைபெறும் ஜெயம் ரவியின் 'பிரதர்' பட இசை வெளியீட்டு விழா!

இந்த மாதம் நடைபெறும் ஜெயம் ரவியின் ‘பிரதர்’ பட இசை வெளியீட்டு விழா!

-

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் நடைபெற இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.இந்த மாதம் நடைபெறும் ஜெயம் ரவியின் 'பிரதர்' பட இசை வெளியீட்டு விழா!

நடிகர் ஜெயம் ரவி தற்போது பல படங்களை தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் பிரதர் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கியிருக்கிறார். இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, நட்டி நடராஜ், சரண்யா பொன்வண்ணன், சீதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தினை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.இந்த மாதம் நடைபெறும் ஜெயம் ரவியின் 'பிரதர்' பட இசை வெளியீட்டு விழா! அதன்படி ஏற்கனவே மக்காமிஷி எனும் பாடல் வெளியாகி இணையத்தில் செம டிரண்டாகி வந்தது. அதைத்தொடர்ந்து இப்ப படமானது வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என புதிய தகவல் வெளியாகியுள்ளன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.

MUST READ