ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் பிரதர் எனும் படத்திலும் நடித்துள்ளார் ஜெயம் ரவி. இந்த படத்தை பிரபல இயக்குனர் எம் ராஜேஷ் இயக்க ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜெயம் ரவியின் 30வது படமான இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் பூமிகா சாவ்லா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வந்தது. அதன் பின்னர் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில் பிரதர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. அதே சமயம் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள பாடலின் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.