நடிகர் ஜெயம் ரவி கடைசியாக சைரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றது. அதன் பின்னர் இவர் ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் தனது 30வது திரைப்படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. இந்த படத்திற்கு பிரதர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்த அக்காவாக பூமிகா சாவ்லா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், நட்டி நடராஜ் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான நிலையில் அதைத்தொடர்ந்து படத்தின் மக்காமிஷி எனும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இந்த படமானது தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது என புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.
ஏற்கனவே தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.