Homeசெய்திகள்சினிமாஇன்று ஜெயம் ரவியின் 'தாம் தூம்' திரைப்படம் ரீ- ரிலீஸானது!

இன்று ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ திரைப்படம் ரீ- ரிலீஸானது!

-

- Advertisement -
kadalkanni

ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் இன்று ரீ ரிலீஸாகியுள்ளது.இன்று ஜெயம் ரவியின் 'தாம் தூம்' திரைப்படம் ரீ- ரிலீஸானது!

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் தாம் தூம் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கங்கனா ரனாவத் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து ஜெயராம், ராய் லட்சுமி, ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்திருந்தனர். ரொமான்டிக் மற்றும் ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பல படங்களில் இந்த படமும் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் ஒன்றாகும். இன்று ஜெயம் ரவியின் 'தாம் தூம்' திரைப்படம் ரீ- ரிலீஸானது!இந்நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜனவரி 3) மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் தமிழ்நாட்டில் 50க்கும் மேலான திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. எனவே ரசிகங்களும் தாம் தூம் திரைப்படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

MUST READ