Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவியின் விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு.... சமரச தீர்வு மையம் உத்தரவு!

ஜெயம் ரவியின் விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு…. சமரச தீர்வு மையம் உத்தரவு!

-

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் தற்போது ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் பிரதர் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.ஜெயம் ரவியின் விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு.... சமரச தீர்வு மையம் உத்தரவு!இதற்கிடையில் நடிகர் ஜெயம் ரவி பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கின்றன. இருப்பினும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண உறவை முறித்துக் கொள்வதாக அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திருந்தார். இந்த தகவல் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை கிளப்பியது. நீண்ட நாட்களாக இவர்களின் விவாகரத்து விவகாரம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. இது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் ஜெயம் ரவியுடன் இணைந்து வாழ விரும்புவதாக ஆர்த்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஜெயம் ரவியின் விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு.... சமரச தீர்வு மையம் உத்தரவு!அதன்படி கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களது திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து ஜெயம் ரவியின் மனு, குடும்ப நல நீதிமன்றத்தின் நீதிபதி தேன்மொழி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயம் ரவியும் நேரில் ஆஜராகி இருந்தார். ஆர்த்தி காணொளி காட்சி மூலம் ஆஜராக இருந்தார். அப்போது ஜெயம் ரவி – ஆர்த்தி இருவருக்குமான விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி சமரச தீர்வு மையத்தின் மூலமாக இன்று (நவம்பர் 14) இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தும் படி உத்தரவிட்டிருந்தார். ஆனால் ஆர்த்தி தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமரச பேச்சு வார்த்தையை தள்ளி வைக்க வேண்டி கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த வழக்கு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயம் ரவியிடம் 10 நிமிடங்கள் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

MUST READ