Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவியின் 'ஜீனி' பட புதிய போஸ்டர் வெளியீடு!

ஜெயம் ரவியின் ‘ஜீனி’ பட புதிய போஸ்டர் வெளியீடு!

-

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ஜீனி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.ஜெயம் ரவியின் 'ஜீனி' பட புதிய போஸ்டர் வெளியீடு!ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக சைரன் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் திரைப்படத்திலும், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் இயக்குனர் மிஷ்கின் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அர்ஜுனன் என்பவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கிரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாபிக்கா கேபி, தேவயானி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படமானது ஃபேண்டஸி சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகிறது. ஜெயம் ரவியின் 'ஜீனி' பட புதிய போஸ்டர் வெளியீடு!இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில் தற்போது இதன் செகண்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ