Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவியின் 'சைரன் 108'..... இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு!

ஜெயம் ரவியின் ‘சைரன் 108’….. இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

ஜெயம் ரவியின் 'சைரன் 108'..... இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு!ஜெயம் ரவி நடிப்பில் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள படம் தான் சைரன் 108. ஜெயம் ரவியின் முந்தைய படங்களைப் போல் அல்லாமல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும் இதில் போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஆக்சன் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பாக வெளியான நிலையில் அதை தொடர்ந்து டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்நிலையில் சைரன் 108 படத்தின் இரண்டாவது பாடலான கண்ணம்மா எனும் பாடல் நாளை (பிப்ரவரி 6 அன்று) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் ஜெயம் ரவிக்கும் அவரது மகளுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை காட்டும் பாடலாக இருக்கும் போல் தெரிகிறது. மேலும் படம் வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ