ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் இவர் சைரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆண்டனி பாக்யராஜ் இயக்கி உள்ள இந்த படம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
அதேசமயம் நயன்தாராவுடன் இணைந்து இறைவன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தற்போது வாமனன், என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய ஐ அகமது இயக்கத்தில் ஜன கன மன திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து எம். ராஜேஷ், கிருத்திகா உதயநிதி, கார்த்திக் தங்கவேல் ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களை நடிக்க இருக்கிறார்.
இவ்வாறாக பிசியாக நடித்து வரும் ஜெயம் ரவியின் ‘JR32’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜை உடன் தொடங்கியுள்ளது.
மேலும் ‘ஜீனி’ என்று இப்படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ஜெயம் ரவியின் 32 வது படமான இந்த படம் வேல்ஸ் நிறுவனத்தின் 25 வது தயாரிப்பாகும்.
இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கிருத்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இப்படத்தை மிஷ்கினின் உதவி இயக்குனரான அர்ஜுனன் இயக்குகிறார். இதற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த படம் ஜெயம் ரவியின் கேரியரில் மிகப்பெரிய படமாக அமையும் என்று கூறப்படுகிறது.
இன்று தொடங்கப்பட்டுள்ள படத்தின் பூஜையில் ஜெயம் ரவி, கிருத்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் முதல் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பின் ஜூலை 20ஆம் தேதி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.