Homeசெய்திகள்சினிமாவயிறு குலுங்கி சிரித்த கீர்த்தி சுரேஷ்... ஜெயம்ரவியால் கலகலப்பாக மாறிய இடம்...

வயிறு குலுங்கி சிரித்த கீர்த்தி சுரேஷ்… ஜெயம்ரவியால் கலகலப்பாக மாறிய இடம்…

-

- Advertisement -
சைரன் திரைப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சியின்போது, ஜெயம்ரவி செய்த செயலால் நடிகை கீர்த்தி சுரேஷ் வயிறு குலுங்கி சிரித்த காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயம்ரவி உள்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாகி நடித்து வருகிறார். ஜெயம்ரவி நடித்த அகிலன் திரைப்படம் தோல்வியை தழுவியது. தொடர்ந்து ஜெயம்ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் இறைவன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதையடுத்து, ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் சைரன். ஆண்டனி பாக்யராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் ஜெயம்ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சைரன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் புரமோசன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஒரு புரமோசன் நிகழ்ச்சியில் ஜெயம்ரவி செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷை போல ஜெயம்ரவி நடித்துக் காட்டி வசனம் பேசினார். இதை பார்த்துக் கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் வயிறு குலுங்கி சிரித்தார்.

MUST READ