Homeசெய்திகள்சினிமாசென்னையில் ஒரே இடத்தில் படப்பிடிப்பு... இரு இளம் நடிகர்கள் பங்கேற்பு...

சென்னையில் ஒரே இடத்தில் படப்பிடிப்பு… இரு இளம் நடிகர்கள் பங்கேற்பு…

-

ஜெயம்ரவி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சைரன். இப்படத்தை ராஜேஸ் இயக்கியிருந்தார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, மிஷ்கினின் உதவி இயக்குநர் அர்ஜூனன் இயக்கத்திலும் ஜெயம்ரவி நடித்து வருகிறார். இது அவரது 32-வது திரைப்படம் ஆகும். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவன் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜீனி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

இத்திரைப்படத்திற்கு ஜீனி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கிருத்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இதற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஜெயம்ரவியின் திரை வாழ்வில், இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அதே இடத்தில் கார்த்தி நடிக்கும் 26-வது படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. நலன் குமாரசாமி இயக்கும் இப்படத்தில், கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறார். இரு நட்சத்திர திரைப்படங்களின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடைபெறுவதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே கார்த்தி மற்றும் ஜெயம்ரவி இணைந்து பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ