Homeசெய்திகள்சினிமாஜெயம்ரவியின் புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி... இணையத்தில் பரபரப்பு...

ஜெயம்ரவியின் புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி… இணையத்தில் பரபரப்பு…

-

பொன்னியின் செல்வன் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு ஜெயம்ரவி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில், நயன்தாராவுடன் இணைந்து இறைவன் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து சைரன் என்ற படத்தில் ஜெயம்ரவி நடித்திருந்தார். கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில்வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது
இதையடுத்து ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ஜீனி. இப்படத்தை, மிஷ்கினின் உதவி இயக்குநர் அர்ஜூனன் இயக்கி வருகிறார். இது அவரது 32-வது திரைப்படம் ஆகும். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவன் இந்த படத்தை தயாரிக்கிறது. இதுதவிர கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
நடிகர் ஜெயம்ரவி ஆர்த்தி என்பவரை 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆரவ், ஜெயம்ரவியுடன் இணைந்து டிக் டிக் டிக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜெயம்ரவியின் மனைவி ஆர்த்தி, நடிகையாக இல்லாவிட்டாலும், பேஷன் மீது கொண்ட ஆர்வத்தில் பல புகைப்படங்களையும் பதிவிட்டு ஆக்டிவாக இணையத்தில் இருந்து வருபவர். இந்நிலையில், ஆர்த்தி ரவி, ஜெயம் ரவியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படங்களையும் சமூக வலைதளங்களிலிருந்து நீக்கியிருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக பல தகவல்கள் இணையத்தி்ல் கசிந்து கொண்டிருக்கும் நிலையில், உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.

MUST READ