Homeசெய்திகள்சினிமாஊர்வசி நடிப்பில் ஜெ பேபி... டிரைலர் ரிலீஸ் அப்டேட்....

ஊர்வசி நடிப்பில் ஜெ பேபி… டிரைலர் ரிலீஸ் அப்டேட்….

-

இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தினேஷ், ஊர்வசி, மாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஜெ பேபி படத்தின் டிரைலர் அப்டேட் வெளியாகி உள்ளது.

சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் ஜெ பேபி. இத்திரைப்படத்தை கோல்டன் ரேசியோ பிலிமஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளது. படத்தை இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் புரோடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் ஊர்வசி, மாறன் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அம்மா மற்றும் இரண்டு மகன்கள் ஆகியோரின் கதையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி உள்ளது.

செண்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை பாணியில் முழுக்க முழுக்க இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. போனி பிரிட்டோ இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பின்ணணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இத்திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து படத்தின் டீசர், பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. நாளை படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் 8-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ