Homeசெய்திகள்சினிமாஇணையதொடர் தயாரிப்பில் இறங்கிய ஜீத்து ஜோஷப்

இணையதொடர் தயாரிப்பில் இறங்கிய ஜீத்து ஜோஷப்

-

மலையாளத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஜீத்து ஜோஷப். இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் த்ரிஷ்யம். இதில் மோகன்லால் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு மனைவியாக பிரபல தமிழ் நடிகை மீனா நடித்திருந்தார். இவர்கள் நடிப்பில் த்ரில்லர் கதைக்களத்தில் வௌியான த்ரிஷ்யம் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக மாறியது. மலையாள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம், வசூலிலும் சக்கைப்போடு போட்டது. அதையடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்தது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் பெரும் வெற்றி பெற்றது. அண்மையில் இந்த திரைப்படம் ஆங்கிலத்தில் ரீமேக் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜீத்து ஜோஷப் திரைப்படங்களை தாண்டி, வெப்சீரிஸ் உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்காக ரோஸ்லின் என்ற தொடரை இவர் தயாரிக்கிறார்.

இந்த தொடரை, இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுமேஷ் நந்தகுமார் என்பவர் இயக்குகிறார். மேலும், இந்த தொடருக்கு, சசிகுமார் என்பவர் கதை, திரைக்கதை எழுதுகிறார். அந்த வகையில், இந்த தொடரில் ஜீத்து ஜோஷப் தயாரிக்க மட்டும் செய்கிறார். இந்த தொடரின் படப்பிடிப்பு, தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

MUST READ