Homeசெய்திகள்சினிமாஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பிளாக்பஸ்டர் ஹிட்... வசூல் எவ்வளவு தெரியுமா?

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பிளாக்பஸ்டர் ஹிட்… வசூல் எவ்வளவு தெரியுமா?

-

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லக்ஷ்மி மேனன் ஆகியோரின் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா படத்தின் மாபெரும் வெற்றி பெற்றது.  தற்போது ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வசூல் ரீதியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீசான ஜிகர்தண்டா படத்திற்கும் இப்படத்திற்கும் ஒரு சிறிய தொடர்பு இருப்பது போல படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் காண்பிக்கப்பட்டது. தீபாவளி ஸ்பெஷல் ஆக ரிலீசான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் நடிகர்களான லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா போன்றோர் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். நடிப்பரக்கன் எஸ் ஜே சூர்யா எப்படியும் பெர்பார்மன்சில் மிரட்டுவார் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தார். வழக்கமாக இல்லாமல் ராகவா லாரன்ஸ் இப்படத்தில் அவருடைய நடிப்பினை ஆச்சரியப்படும்படி நடித்திருந்தார்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கிளைமாக்ஸ் 30 நிமிட காட்சியில் ரசிகர்களின் கைதட்டல்கள் திரையரங்குகளில் அதிர வைத்தன. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்காக ஒரு சிறப்பு வீடியோவாக யானையையும் சினிமாவையும் ஒப்பிட்டு வீடியோ ஒன்றினை உருவாக்கி படம் பிளாக்பஸ்டர் ஹிட் என அறிவிக்கப்பட்துள்ளது. மேலும் படம் ரிலீஸ் ஆகி மூன்று வாரங்கள் ஆகிய நிலையில் இப்படமானது உலக அளவில் 66 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்க திரு ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.

MUST READ