Homeசெய்திகள்சினிமாபிரபுதேவாவுக்கு ஜோடியாகும் ஜோ பட நடிகை!

பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் ஜோ பட நடிகை!

-

கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஜோ. பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் ஜோ பட நடிகை!ரியோ ராஜ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க பவ்யா திரிகா, மாளவிகா மனோஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். அழகான காதல் கதையில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வந்தவர் தான் பவ்யா த்ரிகா. இவர் தற்போது புதிய படம் ஒன்றில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதாவது பிரபுதேவா தற்போது பேட்ட ராப், மூன் வாக் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில் விஜயின் கோட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் ஜோ பட நடிகை! அதே சமயம் இவர் சிங்கநல்லூர் சிக்னல் எனும் படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தை ஜே எம் ராஜா எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி இந்த படத்தில் டிராபிக் போலீஸாக நடிக்கிறார் பிரபுதேவா. இந்தப் படத்தில் தான் பிரபுதேவாவிற்கு ஜோடியாக ஜோ பட நடிகை பவ்யா த்ரிகா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ