Homeசெய்திகள்சினிமாஉலகத்திற்கு மகிழ்ச்சி... ஷாருக்கானை புகழ்ந்த பிரபல மல்யுத்த வீரர்

உலகத்திற்கு மகிழ்ச்சி… ஷாருக்கானை புகழ்ந்த பிரபல மல்யுத்த வீரர்

-

2023-ம் ஆண்டில் ஒரே நடிகரின் இரண்டு திரைப்படங்கள் தலா ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது என்றால், அது ஷாருக்கானின் படங்கள் தான். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஷாருக்கான் பாலிவுட்டின் கிங் காங் என்று அழைக்கப்படுபவர். பாலிவுட் பாஷா என்றும் கிங் ஆஃப் ரொமான்ஸ் என்றும் ரசிகர்களால் குறிப்பாக ரசிகைகளால் கொண்டாடப்படும் ஷாருக்கானுக்கு சினிமா வாய்ப்பு எளிதில் கிடைக்கவில்லை.

டெல்லியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஷாருக்கானின் ஆரம்பகால வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இல்லை. பெற்றோர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட சகோதரியை கவனித்துக்கொள்ளும் கடமையும் ஷாருக்கானுக்கு இருந்தது. அப்படிப்பட்ட சூழலில் தான் ‘தில் டரியா’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. மும்பை வந்த ஷாருக்கானை ‘தில் ஆஷ்னா ஹை’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார் நடிகை ஹேமமாலினி. அன்று தொடங்கிய ஷாருக்கானின் திரைப்பயணம் 32 ஆண்டுகளாகியும் இன்றுவரை அவரை முன்னிலையில் வைத்துள்ளது. 90 களில் பெரும்பாலான படங்களில் ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்த அவரை ரசிகைகள் தங்களது காதலனாகவே கொண்டாடினார்கள்.

அண்மையில் ஷாருக்கான்நடிப்பில் டன்கி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் ஷாருக்கானை பிரபல மல்யுத்த வீரர் ஜான் சேனா, பாராட்டி இருக்கிறார். இந்த உலகிற்கு நீங்கள் நிறைய செய்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியை வழங்கியிருக்கிறீர்கள். அனைத்திற்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

MUST READ