- Advertisement -
வருண் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜோஸ்வா இமை போல் காக்க படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் காதலை மாறுபட்ட கோணத்தில் திரைக்கு வரும் கல்ட் இயக்குநர் கௌதம் மேனன். மின்னலே படத்தில் தொடங்கிய கௌதமின் திரைப்பயணம் என்றுமே ஏறுமுகம் தான். கௌதம் மேனனின் படங்களுக்கு மட்டுமன்றி, அவரது வசனத்திற்கும், அவரது குரலுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. காதலை காவியமாக திரைக்கு கொண்டு வரும் யுக்தி கௌதம் மேனனின் தனித்துவமாகும்.
கௌதம் மேனன் இயக்கத்தில் இறுதியாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியானது. இதில் சிம்பு நாயகனாக நடித்திருந்தார். கௌதம் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் ஜோஷ்வா இமை போல் காக்க. பல ஆண்டுகளாக இத்திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில், வருண் நாயகனாக நடித்திருந்தார். மேலும், கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.