Homeசெய்திகள்சினிமாஇயக்குனர் வெற்றிமாறனிடம் வேண்டுகோள் விடுத்த ஜூனியர் என்டிஆர்!

இயக்குனர் வெற்றிமாறனிடம் வேண்டுகோள் விடுத்த ஜூனியர் என்டிஆர்!

-

தெலுங்கில் பிரபல நடிகரான ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தற்போது தேவரா எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது.இயக்குனர் வெற்றிமாறனிடம் வேண்டுகோள் விடுத்த ஜூனியர் என்டிஆர்! இந்த படத்தினை நந்தமுரி தரகா ராமா ராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. கொரட்டலா சிவா இந்த படத்தினை இயக்கி இருக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் ஜூனியர் என்டிஆர் க்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க வில்லனாக சைஃப் அலிகான் நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. எனவே திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வரும் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூனியர் என்டிஆர், இயக்குனர் வெற்றிமாறனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதாவது ,”என்னுடைய ஃபேவரைட் இயக்குனர் வெற்றிமாறனிடம் கேட்கிறேன். என்னுடன் ஒரு படம் பண்ண வேண்டும். அந்த படம் நேரடி தமிழ் படமாக இருக்க வேண்டும். அதனை தெலுங்கில் டப் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே ஜூனியர் என்டிஆர் விழா மேடை ஒன்றில் வெற்றிமாறனுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ