Homeசெய்திகள்சினிமாஜூனியர் என்டிஆரின் 'தேவரா' .... ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ …. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

-

ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஜூனியர் என்டிஆரின் 'தேவரா' .... ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ஜூனியர் என்டிஆர் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக ஆர் ஆர் ஆர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தேவரா எனும் திரைப்படம் உருவாக்கி இருக்கிறது. இதனை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்க நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரத்னவேலு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடங்களில் மிரட்ட அவருடன் இணைந்து பிரகாஷ் ராஜ், ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சைஃப் அலிகான் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஜூனியர் என்டிஆரின் 'தேவரா' .... ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கிளிம்ப்ஸ் வீடியோ, பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எனவே படமானது வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 7) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேவரா படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பினை பட குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இதன் ட்ரெய்லர் வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ