ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் தேவரா, இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஜூனியர் என்டிஆர் கடைசியாக பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் தேவரா எனும் படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்க படத்தில் வில்லனாக சைஃப் அலிகான் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ், யுவசுதா ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்கி வருகிறார். படத்திற்கு ரத்தினவேலு ஒளிப்பதிவு படத்திற்கு ரத்தினவேலு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தில் ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி தேவரா பாகம் 1, 2024 அக்டோபர் 10ம் தேதி திரையிடப்பட உள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர். இதற்கிடையில் முன்னோட்ட வீடியோவும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.