ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவரது நடிப்பில் கடைசியாக தேவரா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்கியிருந்த நிலையில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும்bகிட்டத்தட்ட500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ஜூனியர் என்டிஆர், வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கேஜிஎப் சாப்டர் 1 மற்றும் 2, சலார் ஆகிய படங்களை இயக்கி பிரம்மாண்ட வெற்றி கண்ட பிரசாந்த் நீல் இயக்கத்தில் (NTR31) தனது 31வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் ஜூனியர் என்டிஆர். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதன்படி இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் நந்தமுரி தரகா ராமா ராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படமானது 2026 ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து சப்த சாகரடாச்சே எல்லோ எனும் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை ருக்மினி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என ஏற்கனவே தகவல் கசிந்தது. தற்போது இதன் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ( டிசம்பர்) தொடங்கும் என புதிய தகவல் தெரிவிக்கிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.