Homeசெய்திகள்சினிமாமலையாளத்தை அடுத்து தமிழை ஆட்கொள்ள வரும் பெரு வெள்ளம்… தமிழில் வெளியாகும் 2018!

மலையாளத்தை அடுத்து தமிழை ஆட்கொள்ள வரும் பெரு வெள்ளம்… தமிழில் வெளியாகும் 2018!

-

ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கிய ‘2018’ என்ற திரைப்படம் கடந்த மே 5-ம் தேதி மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் டோவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, குஞ்சாக்கோ போபன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெய்த பெருமழையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இந்த படத்தின் மூலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அந்த ஒரு வார காலத்தில் அனுபவித்த துயரங்களையும், அதனை கடந்து வர அவர்கள் எடுக்கும் முயற்சிகளையும் மிக நுணுக்கமாகவும் இயல்பாகவும் வெளிப்படுத்தியுள்ளார். அதனால் மினிமம் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் வெளியான 20 நாட்களில் 140 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது.

கேரளாவில் மட்டுமே இன்று வரை பல திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. மோகன்லால் நடிக்காத ஒரு படம் இவ்வளவு வசூல் செய்துள்ளது இதுவே முதல் முறை.

இந்நிலையில் 2018 திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் 100 திரையரங்குகளில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த படம் கேரளாவை போல் தமிழகத்திலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ