Homeசெய்திகள்சினிமா“அனிமல்“ இயக்குநர் உடன் ஜூனியர் என்.டி.ஆர் சந்திப்பு - காரணம் ?

“அனிமல்“ இயக்குநர் உடன் ஜூனியர் என்.டி.ஆர் சந்திப்பு – காரணம் ?

-

அனிமல்’ இயக்குநர் உடன் ஜூனியர் என்.டி.ஆர் சந்திப்பு மும்பையில் “அனிமல்“ இயக்குநரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய ஜூனியர் என்.டி.ஆர்.

ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள படம் ‘தேவாரா’. இதன் முதல் பாகத்தின் ட்ரெய்லர் இன்று (செப்.10) மாலை வெளியாக உள்ளது. கொரட்டலா சிவா இயக்கிய இந்தப் படத்தில் சைஃப் அலி கான், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்திருக்கிறார்கள். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

‘தேவாரா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. படக்குழுவினர் விழாவில் கலந்து  கொள்வதற்காக மும்பை சென்றிருக்கிறது.

ஆந்திரா, தெலுங்கானாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கிய முதல் தமிழ் நடிகர்!

இந்நிலையில் ‘அனிமல்’ இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். இந்த சந்திப்பு நட்பு ரீதியிலான சந்திப்புதான். இருவரும் தங்களுடைய அடுத்டுத்த படங்கள் மற்றும் சினிமா குறித்து பேசியுள்ளனர். மேலும், இருவரும் இணைந்து படம் பண்ணுவது குறித்தும் பேசியுள்ளனர். தற்போது வெவ்வேறு படங்களில் மும்முரமாக இருந்தவரும் இவர்கள்  வரும் காலத்தில் இணைய வாய்ப்பு இருக்கிறது  என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

MUST READ