Homeசெய்திகள்சினிமா"பாலிவுட்டில் களமிறங்கும் ஜூனியர் என்டிஆர்"

“பாலிவுட்டில் களமிறங்கும் ஜூனியர் என்டிஆர்”

-

பாலிவுட் திரைப்படம் வார் 2 படத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வருவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கிய வார் திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் வாணி கபூர், அசுதோஸ் ராணா, டைகர் ஷெராப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.இந்த படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இத்திரைப்படம் வெளியான பின்னர் ரூ.475 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

வார் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு படத்தின் இரண்டாம் பாகத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இயக்குனர் அயன் முகர்ஜி இப்படத்தை இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அதன்படி சில நாட்களுக்கு முன்பு இப்படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் ஜூனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மே 20ல் ஜூனியர் என்டிஆர் இன் பிறந்தநாள் அன்று, ஹிருத்திக் ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தராக்‌. இந்த நாள் மகிழ்ச்சியாகவும் வரும் ஆண்டு ஆக்சன் நிறைந்ததாகவும் அமைய வாழ்த்துகிறேன். யுத்த பூமியில் உங்களுக்காக நான் காத்திருக்கிறேன் நண்பா. நாம் சந்திக்கும் வரை உங்கள் நாள் மகிழ்வும் ,அமைதியும் நிறைந்திருக்கட்டும். ” என்று ஜூனியர் என்டிஆர் க்கு வாழ்த்துக் கூறி மறைமுகமாக ஜூனியர் என்டிஆர் ‘வார் 2’ படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
மேலும் இப்படத்தின் மூலம் ஜூனியர் என்டிஆர் முதன் முதலில் பாலிவுட்டில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ