நடிகை ஜோதிகா நடித்துள்ள காட்சி ஒன்று சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகை ஜோதிகா வாலி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் விஜய் அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி தனக்கென தனி ஒரு அடையாளத்தையும் ஏராளமான ரசிகர்களையும் சேகரித்து வைத்துக்கொண்டார். அடுத்தது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா சில காலங்கள் சினிமாவை விட்டு விலகியிருந்தார். பின்னர் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதைத்தொடர்ந்து காதல் படங்களில் நடிக்காமல் சிறந்த கதையும்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து முக்கியமான ரோல்களில் நடித்து வருகிறார். அதன்படி இவர் தற்போது தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஜோதிகா. அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான சைத்தான், காதல் தி கோர் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த. மேலும் இவர் கடுமையாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை ஃபிட்டாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தான் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் டப்பா கார்டெல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியில் ஜோதிகா நடித்துள்ள நிலையில் இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.