ஜோதிகா, மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் கூட்டணியில் உருவாகி இருக்கும் சைத்தான் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
ஜோதிகா, தற்போது தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி அடுத்தடுத்து நடித்து வருகிறார். 36 வயதினிலே படத்தில் தொடங்கி காற்றின் மொழி, ஜாக்பாட், மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், ராட்சசி, பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே, தம்பி என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வரவேற்பும் பெற்று வருகிறார்.
அண்மையில் அவரது நடிப்பில் மலையாளத்தில் காதல் தி கோர் என்ற திரைப்படம் வெளியானது. இதில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்திருப்பார். தமிழ், மலையாளம் மட்டுமன்றி தற்போது இந்தியிலும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கழித்து தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். ஒரு சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது. விகாஸ் பாஹ்ல் இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்திலிருந்து மிரட்டலான புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் வரும் மார்ச் மாதம் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மாதவனும், ஜோதிகாவும் இணைந்து நடிக்கும் திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.